வெடி சுமந்த உடலோடு
கனவுகளின் விடியலுக்காய்
கயவர் நெஞ்சுடைக்க
தீப்பிழம்பானாய்
கதிரவன் சாயல் கண்டு
கரும் புலியாகி எம்மவர்
வலிசுமந்து கந்தக புகையூடே
கரைந்தது நாமறிவோம்
காலம் எமக்களித்த
உயிராயுதம் -அது
வெற்றியின் ரகசியம்
என்னவன் ஊட்டிய
இறுதிச்சோற்றில் பற்றியது
பெரும் பாசப்போர்
கரிகாலன் கண்கள் கனந்தும்
வேளை கையசைத்து
விழி வழி மறைந்த
மாசற்ற வேங்கைகள்
என் தலைவன் கட்டிய
படைகளின் துருப்புக்களாய்
ஒளிர்ந்த கருஞ்சட்டை
வீரர்கள்
தாகங்கள் மாறாத தேகங்கள்
பெரும் புயலாகி கரும் புகையாகிய
சரிதங்கள்
வெற்றி சாவுகளை நோக்கிய
பயணம் விடுதலை
நெருப்பாகிய -இவர்
காவியம்
ஒற்றை உடலோடு ஒட்டிய
ஓராயிரம் கந்தக துகள்கள்
நய வஞ்சகர் குரல்வளை
கிழிக்க கருஞ்சட்டை
புணைந்த கரும்புலிகள்
புல்லரித்துப்போகும்
கரும் புலியின் கதைக்கேட்டு
–கேசுதன்
The post கருஞ்சட்டை வீரர்கள் | கேசுதன் appeared first on Vanakkam London.