• Mon. Jul 28th, 2025

24×7 Live News

Apdin News

கருந்துளை ஒரு வான்பொருளை விழுங்கும்போது என்ன நடக்கும்? கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்

Byadmin

Jul 28, 2025


கருந்துளை ஒரு வான்பொருளை விழுங்கும்போது என்ன நடக்கும்? கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், NASA/CXC/A.Hobart

கருந்துளை. விண்வெளியில் இருக்கும் மர்மமான வான்பொருள்களில் ஒன்று. அவற்றைப் புரிந்துகொள்வது பேரண்டத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் என்று வானியல் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு கருந்துளையை இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் என்ற விண்வெளித் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.

GRS 1915+105 எனப்படும் அந்தக் கருந்துளை, பால்வீதி கேலக்சியில், பூமியில் இருந்து சுமார் 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

GRS 1915+105 கருந்துளை பூமியில் இருந்து சுமார் 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது சூரியனைவிட 12 மடங்கு அதிக நிறைகொண்டது.

ஆஸ்ட்ரோசாட் மூலம் இந்திய விஞ்ஞானிகள் அந்தக் கருந்துளையை ஆய்வு செய்து வந்தனர். அப்போது அதிலிருந்து வெளியான சமிக்ஞைகளைப் பதிவு செய்ததன் மூலம், அதைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

By admin