• Thu. Jul 16th, 2026

24×7 Live News

Apdin News

‘கருவிலேயே மற்ற குட்டிகளை சாப்பிடும்’ – சுறா பற்றிய சுவாரஸ்யமான 9 தகவல்கள்

Byadmin

Jul 16, 2026


கணிதம் தெரியும், இசையை ரசிக்கும் – சுறாக்கள் பற்றிய சுவாரஸ்யமான 9 தகவல்கள்

பட மூலாதாரம், Hannes Klostermann/ Ocean Image Bank

    • எழுதியவர், ஜோஸ்லின் டிம்பெர்லி, சோஃபியா குவாக்லியா, கேத்தரீன் லேத்தம் & ஸ்டீஃபன் டௌலிங்
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

பலரும் நினைப்பதைவிட, சுறாக்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே பல பொதுவான அம்சங்கள் உள்ளன.

இன்று பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதுகெலும்புள்ள வேட்டையாடி உயிரினங்களில் மிகவும் பழமையானவற்றில் சுறாக்களும் அடங்கும்.

அத்தகைய வியத்தகு உயிரினம் நம்மை விழிவிரிய வைக்கும் சுவாரஸ்யமான 9 தகவல்களை இங்கே பார்ப்போம்.

1. அனைத்துமே அழிந்தாலும், பூமியில் சுறாக்கள் பிழைத்திருக்கும்

பூமியில் நிகழ்ந்த ஐந்து முக்கியப் பேரழிவுக் காலங்களையும் சுறாக்களோ அல்லது அவற்றின் நெருங்கிய மூதாதைகளோ கடந்து பிழைத்திருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அவற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்று ‘பெர்மியன்-ட்ரையாசிக் பேரழிவு’. இது பெரும்பாலும் ‘பெரும் பேரழிவு’ (Great Extinction) என்று அழைக்கப்படுகிறது.

By admin