• Fri. Sep 4th, 2026

24×7 Live News

Apdin News

கரூர்: ஏஐ ரோபோக்கள் கற்றுக் கொள்ள தரவு தரும் பெண்கள் – என்ன நடக்கிறது?

Byadmin

Sep 4, 2026


காணொளிக் குறிப்பு,

ஏஐ ரோபோக்கள் கற்றுக் கொள்ள தரவு தரும் கரூர் பெண்கள்

பிரசுரிக்கப்பட்டது

கரூரில் இயங்கிவரும் ஏஐ டேட்டா நிறுவனம் ஒன்று, ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய மனித உருவ ரோபோக்களுக்கு தேவையான மிகப்பெரும் தரவுகளை மனிதர்கள் மூலம் வழங்கி வருகிறது.

ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்துவரும் கண்ணகி, கேமரா பொருத்தப்பட்ட தலைப்பட்டை ஒன்றை அணிந்து தான் செய்யும் வேலையை பதிவுசெய்து வருகிறார்.

ஏஐ ரோபோ ஒரு பொருளை எப்படி பிடிக்க வேண்டும், நிறத்தை வேறுபடுத்திப் பார்ப்பது என்பது போன்ற துல்லியமான தரவுகளை அளிப்பதற்காக நாங்கள் சென்ற நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பயிற்சியளித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பொறியியல் பட்டதாரிகள்.

செய்தியாளர்: நந்தினி வெள்ளைச்சாமி

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: சாம் டேனியல்

விரிவாக காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin