• Tue. May 12th, 2026

24×7 Live News

Apdin News

கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் விஜய் முதல்வரானது பற்றி என்ன சொல்கிறார்கள்?

Byadmin

May 12, 2026


விஜய் தமிழக முதல்வரானது பற்றி கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் கூறுவது என்ன?
படக்குறிப்பு, மாதேஸ்வரி – விமல்

”கரூரில் உயிரிழந்த 41 பேருடைய குடும்பமும் என் குடும்பம் என்று விஜய் கூறியிருக்கிறார். அவர் முதல்வராகி இருப்பதால், எங்கள் தேவைகளை அவர் நிச்சயமாக நிறைவேற்றுவார். நாட்டுக்கும் அவர் நல்லது செய்வார் என்று நம்புகிறோம்.”

கரூர் ஏமூரைச் சேர்ந்த சக்திவேலின் வார்த்தைகள் இவை. கரூரில் கடந்த ஆண்டு செப்டெம்பர் 27 அன்று, விஜய் பரப்புரையில் நடந்த கூட்ட நெரிசலில் இவர் தனது மனைவியையும், மகளையும் பறிகொடுத்தார்.

விஜய் தமிழக முதல்வராக பதவியேற்ற ஞாயிற்றுக்கிழமையன்று சக்திவேலை போலவே, கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் சிலர் பிபிசி தமிழிடம் பேசினர்.

 பெருமாள்–செல்வராணி குடும்பம்.
படக்குறிப்பு, பெருமாள் – செல்வராணி குடும்பம்

விஜய் பதவியேற்பு – ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாத வேலுசாமிபுரம்

தமிழக முதல்வராக விஜய் மே 10-ஆம் தேதியன்று பதவியேற்றபோது மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்வையும், சமூக ஊடகப் பதிவுகளால் தங்கள் உணர்வுகளையும் வெளிப்படுத்தினர்.

அந்த நாளில் கரூர் வேலுசாமிபுரம் எப்படியிருக்கிறது, அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் எத்தகைய உணர்வில் உள்ளன என்பதை அறிய பிபிசி கள ஆய்வுக்குச் சென்றது.

By admin