• Tue. May 12th, 2026

24×7 Live News

Apdin News

‘தனி அணியா.. தவெக அணியா?’ – எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரளும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்?

Byadmin

May 12, 2026


எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், EPS

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுள்ள நிலையில், அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் இன்னமும் தேர்வாகவில்லை. இது அதிமுகவில் பிளவை குறிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், “பொதுச்செயலாளர் என்பவர் வெற்றியைத் தேடித் தர வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தொடர் தோல்விகள் மட்டுமே கிடைத்து வருகின்றன. இதனை ஆராயாமல் இரு குழுக்களாக பிரிந்துவிட்டனர்” என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 47 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று மூன்றாம் இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டது.

கடந்த தேர்தலில் இரண்டாம் இடம் பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரிசையில் அமர்ந்த அதிமுக, இந்தமுறை மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதால் அக்கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனியாக ஆலோசனை நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

By admin