• Tue. May 12th, 2026

24×7 Live News

Apdin News

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கொடுத்த பரிசு

Byadmin

May 12, 2026


தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்துள்ளார்.

இதன்போது ஸ்டாலினும் விஜயும் ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்தி மரியாதையை வெளிப்படுத்திக் கொண்டனர். அப்போது புதிய முதலமைச்சராக பதவியேற்ற விஜய்க்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இணைந்திருந்தார்.

விஜய் வருகைதந்தபோது, வீட்டு வாசலுக்கே சென்று விஜயை வரவேற்ற உதயநிதி, அவரது கையை பிடித்து, வீட்டினுள் அழைத்துச் சென்று உபசரித்ததாக கூறப்படுகிறது.

அப்போது மு.க.ஸ்டாலினும் விஜயும் ஒருவருக்கொருவர் மரியாதையை பகிர்ந்துகொண்டனர். அதன் பின் சுமார் 10 நிமிடங்கள் பேசினர்.

பிறகு, உதயநிதி ஸ்டாலின் “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” என்ற நூலை முதலமைச்சர் விஜய்க்கு பரிசளித்தார்.  திராவிட இயக்கம் தொடர்பான பல்வேறு அரசியல் தலைவர்களின் குறிப்புகள் அந்த நூலில் காணப்படுகின்றன.

அதன் முகப்பு அட்டையில் அறிஞர் அண்ணாதுரை, தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin