• Mon. May 18th, 2026

24×7 Live News

Apdin News

கர்நாடகாவில் ஹிஜாப், பூணூல் அணிந்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன்னுள்ள சவால்கள் என்ன?

Byadmin

May 18, 2026


கர்நாடகா, ஹிஜாப் தடை நீக்கம்
படக்குறிப்பு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மதச் சின்னங்களை அணிய கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது (சித்தரிப்புப் படம்).

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கர்நாடகாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவிகள், தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

ஹிஜாப் அணிய கர்நாடக அரசு அனுமதி அளித்ததை அடுத்து, அந்த மாணவிகள் தங்களது படிப்பை மீண்டும் தொடங்குவதற்கான புதிய திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.

சில ஆசிரியர்களால் பூணூல் (தென்னிந்தியாவில் ஜனிவாரம் என்று அழைக்கப்படும் புனித நூல்) அணிவது தடுக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இது நிம்மதியை அளித்துள்ளது.

மாண்டியாவில் உள்ள தனது கல்லூரியில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு எதிராக “அல்லாஹு அக்பர்” என்று முழக்கமிட்டு, அதன் மூலம் “ஹிஜாப் பெண்” என்ற புனைப்பெயரைப் பெற்ற முஸ்கான் கான், தற்போது தனது படிப்பை மீண்டும் தொடரத் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில், தனது மகன் ஆனந்த் எஸ். தீர்த்தா தற்போது சந்தித்து வரும் அதே கொடுமையை மற்ற மாணவர்கள் சந்திக்க நேரிடக்கூடாது என சுவர்ணா தீர்த்தா விரும்புகிறார்.

By admin