மேலும் சுதந்திரத்திற்கான உரிமை என்பது வெற்று முழக்கம் கிடையாது, அது அரசியலமைப்பு விதி. அந்த விதி எல்லா சூழ்நிலைகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், நஜீப் வழக்கை பொறுத்தவரை விசாரணையில் ஏற்படும் காலதாமதம், சிறையில் இருந்து விடுவிக்கப்படும் உரிமையை அவருக்கு வழங்குகிறது என்று தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் மற்றொரு இரு நீதிபதிகள் அமர்வு, 2020 டெல்லி கலவர வழக்கில் சிறையில் இருக்கும் உமர் காலித் மற்றும் சர்ஜில் இமாம் ஒரு வருடத்திற்கு ஜாமீன் கோர முடியாது என்று வழங்கிய தீர்ப்பையும் பிவி நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு விமர்சித்தது.
எல்லா இரு நீதிபதிகள் அமரவும் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்புகளுக்கு உட்பட்டது என்று பிவி நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு தெரிவித்தது.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, உபா வழக்குகளிலும் ஜாமீன் வழங்கலாம் என்று முன்னர் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.