• Mon. Jul 21st, 2025

24×7 Live News

Apdin News

கர்நாடகா: பெண்கள் உட்பட 100 உடல்களை புதைத்ததாக கூறும் நபர் – எழும் கேள்விகள் என்ன?

Byadmin

Jul 21, 2025


புகார்தாரர், நீதிபதி

பட மூலாதாரம், Anush Kottary

படக்குறிப்பு, புகார்தாரர் கருப்பு துணியால் தலை முதல் கால் வரை முழுவதும் மூடப்பட்ட நிலையில் நீதிபதி முன் ஆஜரானார்

(இந்த செய்தியில் உள்ள தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்)

இரண்டு வாரங்களுக்கு முன், கர்நாடகாவின் மங்களூரு நகரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் 1995 முதல் 2014-க்கு இடைபட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 100 உடல்களை வெவ்வேறு இடங்களில் தான் புதைத்ததாக காவல்துறையிடம் தெரிவித்தார்.

புகார்தாரரான இவர், இந்திய பொது பாதுகாப்பு சட்டத்தின் (பிஎன்எஸ்எஸ்) 183ஆவது பிரிவின் கீழ் ஒரு நீதிபதியின் முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

தனக்கு மேல் இருந்தவர்கள் தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டியதால் இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததாக அவர் சொல்கிறார்.

By admin