சி.பி.சி.ஐ.டி. விசாரணை:
குற்றப்பத்திரிகையின்படி, இந்த சம்பவம் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அப்போது, அந்த பெண்ணின் கணவர் தேயோபந்து காவல் துறையினரால் பொய்யான வழக்கின் பேரில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தனது கணவரை விடுவிக்க கோரி காவல் நிலையத்திற்கு சென்றபோது, தான் இரண்டரை மாத கர்ப்பிணியாக இருந்தும், காவல் நிலைய பொறுப்பதிகாரி, உதவி ஆய்வாளர் மற்றும் சிலர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக அந்த பெண் குற்றம் சாட்டினார். அவருடன் சென்றிருந்த அவரது மைத்துனி, இதை கண்டித்தபோது தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வழக்கறிஞர் தோமர் கூறுகையில், அந்த பெண் நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது தேயோபந்து காவல் நிலையத்திலும், அப்போதைய மூத்த காவல் கண்காணிப்பாளரிடமும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தலைமை நீதித்துறை நடுவர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது; அவர்கள் இந்த வழக்கை முடித்து வைப்பதற்கான அறிக்கையை தாக்கல் செய்தனர் என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.