• Sat. Nov 7th, 2026

24×7 Live News

Apdin News

மலேசியாவை இலகுவாக வென்றது இலங்கை

Byadmin

Nov 7, 2026


ஓமான், அல் அமீரத் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (05) ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது முதல் போட்டியில் மலேசியாவை 9 விக்கெட்களால் வெற்றிகொண்டது.

வேகபந்துவீச்சாளர் கௌஷிக்க குமாரசிங்க,சுழல்பந்துவீச்சாளர் விக்னேஸ்வரன் ஆகாஷ் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுக்களும் ரெஹான் பீரிஸின் அபார துடுப்பாட்டமும் இலங்கை இளையோர் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மலேசிய அணி 28.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆரம்ப வீரர் சியாமில் அக்கில் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 51 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கௌஷிக்க குமாரசிங்க 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் விக்னேஸ்வரன் ஆகாஷ் 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவர் விரான் சமுதித்த ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

ஆனால், ரெஹான் பீரிஸ் (54 ஆ.இ.), சேனுஜ வேக்குனாகொட (30) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வெற்றியை ஈட்டிக்கொsடுத்தனர்.

The post மலேசியாவை இலகுவாக வென்றது இலங்கை appeared first on Vanakkam London.

By admin