• Thu. Apr 30th, 2026

24×7 Live News

Apdin News

கர விமர்சனம்: கொள்ளைக்கார தனுஷ் வெற்றி பெற்றாரா?

Byadmin

Apr 30, 2026


தனுஷ், கர திரைப்படம்

பட மூலாதாரம், dhanushkraja/Instagram

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தனுஷ், மமிதா பைஜு, கருணாஸ், கேஎஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்து, விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள ‘கர’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் குறித்து பல்வேறு நாளிதழ்கள், இணையதளங்களில் வெளியான விமர்சனங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அத்திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

திருட்டைவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ நினைக்கும் கரசாமி (தனுஷ்) சொந்த தொழில் செய்யலாம் என நினைத்து ராமநாதபுரத்திலிருக்கும் தன் தந்தை கே.எஸ். ரவிக்குமாரைத் தேடி செல்கிறார். நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து அதில் கிடைக்கும் கடனில் தொழில் செய்யலாம் என முயற்சிக்கிறார்.

ஆனால், அப்பா ஏற்கெனவே அந்த நிலத்தை அடமானம் வைத்து டிராக்டர் வாங்கியதும் அதனால் ஏற்பட்ட சில குழப்பங்களுக்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரியவருகிறது.

By admin