• Thu. Apr 30th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் பட்டாசு ஆலை விபத்துகளில் கடந்த 15 ஆண்டுகளில் ஒருவருக்குக் கூட தண்டனை கிடைக்கவில்லையா?

Byadmin

Apr 30, 2026


தொடரும் பட்டாசு ஆலை விபத்து உயிரிழப்புகள் – வழக்குகள் அதிகரித்த போதும் தீர்வு கிடைக்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து வரும் நிலையில், ஆலை உரிமையாளர்களுக்கு உரிய நேரத்தில் தண்டனை கிடைக்காதது, அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாதது போன்றவையே இவை தொடரக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இழப்பீடு பெறுவதே கஷ்டமாக இருப்பதால் வழக்கு, தண்டனை பற்றி யாரும் கவனிப்பதில்லை என்கிறார் பட்டாசு வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர் அழகுமணி.

பட்டாசு ஆலையில் உயிரிழந்த குடும்பங்கள் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ள சமூக செயற்பாட்டாளர் விடியல் வீரபெருமாள், முந்தைய வழக்குகள் தொடர்பாக பல்வேறு தரவுகளைத் திரட்டி, வழக்குகளை விரைவுபடுத்த புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தார்.

கட்டனார்பட்டி விபத்தில் 60 நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமென பிபிசியிடம் கூறிய விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, முந்தைய வழக்குகளின் தற்போதைய நிலை பற்றி எதுவும் தெரியவில்லை என்றார்.

‘1,124 பட்டாசு ஆலைகள், 3 ஆயிரம் கடைகள்’

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில்தான் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகள் அமைந்துள்ளன.

By admin