• Thu. Apr 30th, 2026

24×7 Live News

Apdin News

எக்சிட் போல்: தமிழ்நாட்டில் 2016, 2021 தேர்தல் கணிப்புகள் கூறியவையும் உண்மையில் நடந்தவையும் என்ன?

Byadmin

Apr 30, 2026


2026 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், திமுக, அதிமுக, தவெக

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நேற்று (ஏப்ரல் 29) மாலை முதல் சமூக வலைதளங்களில் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்த விவாதங்களே மேலோங்கியுள்ளன.

ஏப்ரல் 29 அன்று மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தமிழ்நாடு தொடர்பாக வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஓர் ஆச்சரியத்தை அளித்திருக்கின்றன.

அதைப் பற்றி பார்ப்பதற்கு முன், நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை கிடையாது, கடந்த காலங்களில் அதிகாரபூர்வ முடிவுகள் கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளன.

இந்த நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் முடிவுகள் மே 4 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.

By admin