• Tue. Oct 6th, 2026

24×7 Live News

Apdin News

கள்ளக்குறிச்சி: கோவில் பூட்டை உடைத்து தலித் மக்களை உள்ளே அனுமதித்த காவல்துறை – என்ன நடந்தது?

Byadmin

Oct 6, 2026


குரால் கோயில் நுழைவு: 16 பேர் மீது வழக்கு; பட்டியலின மக்களை உள்ளே அனுமதித்த எஸ்.பி - என்ன நடந்தது?

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குரால் கிராமத்தில், பட்டியலின மக்களைப் பெருமாள் கோவிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்ததாக பிற்படுத்தப்பட்ட சாதியினர் 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் கதவு பூட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷானாஸ் தலைமையில் போலீசார் கோவிலின் பூட்டை உடைத்து பட்டியலின மக்களை உள்ளே சென்று வழிபட அனுமதித்தனர்.

சட்டத்தின்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஷானாஸ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

’50 ஆண்டுகளாக நீடித்த நடைமுறை’

குரால் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கலியுக சீனிவாச பெருமாள் கோவில் தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருவதாக குரால் ஊராட்சித் தலைவர் லட்சுமியின் கணவர் குணசேகரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

By admin