• Mon. Jul 28th, 2025

24×7 Live News

Apdin News

காஞ்சியில் நடைபயணம்: நெசவாளரிடம் குறைகளை கேட்டறிந்த அன்புமணி | Anbumani listened to the weaver complaints in kanchipuram

Byadmin

Jul 28, 2025


காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரத்​தில் நடைபயணம் மேற்​கொண்ட பாமக தலை​வர் அன்​புமணி, நெச​வாளர்​களின் குறை​களை கேட்டறிந்தார். தமிழக மக்​களின் உரிமை மீட்​போம் என்ற பெயரில், பாமக தலை​வர் அன்​புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்​கொண்டு வரு​கிறார். இதில், 3-வது நாளாக நேற்று காஞ்​சிபுரம் சட்​டமன்ற பகு​தி​யில் நடை பயணம் மேற்​கொண்​டார்.

முன்​ன​தாக, காஞ்​சிபுரம் நத்​தப்​பேட்டை மற்​றும் வையா​வூர் ஏரி​களை பார்​வை​யிட்​டார். இதையடுத்​து, காஞ்​சிபுரம் பட்டு நெசவுக்கு புகழ் பெற்ற பகுதி என்​ப​தால், காஞ்​சிபுரத்​தில் பட்டு நெசவுக்கு பிரசித்தி பெற்ற பிள்​ளை​யார்​பாளை​யம் பகு​தி​யில் நெச​வாளர்​கள் வீட்​டுக்கு சென்​று, நெச​வாளர்​களின் குறை​களை அன்​புமணி கேட்​டறிந்​தார்.

மேலும், பிள்​ளை​யார்​பாளை​யம் பகு​தி​யில் உள்ள நெச​வாளர் ஒரு வீட்​டிற்கு சென்ற அன்​புமணி, நெச​வாளர்​களிடம் நெசவு செய்​வது எப்​படி என்​பது கேட்​டறிந்​தார். அதனைத் தொடர்ந்து அவரும் சோதனை முறை​யில் நெசவு செய்​தார். பின்​னர், நெச​வாளர்​கள், அன்​புமணி​யிடம் கலந்​துரை​யாடினர். குறிப்​பாக, மழைக் காலங்​களில் நெசவு செய்ய முடி​யாமல் கஷ்டப்​பட்டு வரு​கிறோம்.

கூட்​டுறவு சங்​கங்​களில் இருந்து முறை​யாக எங்​களுக்​கு, ’ பாவு’ கொடுப்​ப​தில்லை என தெரி​வித்​தனர். இதனால், முன்பு போல் நெசவுத்​தொழில் வரு​மானம் இருப்​ப​தில்லை என தெரி​வித்​தனர். மேலும், கூட்​டுறவு சங்​கங்​களி​லிருந்து போனஸ் மற்​றும் ஊக்​கத்​தொகை வழங்​கு​வ​தில்லை எனவும் புகார் தெரி​வித்​தனர். இதே​போல் பெரும்​புதூர் பகு​தி​யில் அன்​புமணி நடை பயணம் மேற்​கொண்டு மக்​களின் குறை​களை கேட்​டறிந்​தார்​.



ave_container addtoany_content addtoany_content_bottom">

By admin