• Wed. Apr 22nd, 2026

24×7 Live News

Apdin News

காரெக்ஸ்: ஆணுறை விலையை 30% உயர்த்தப்போகும் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர் – இரான் போரின் விளைவு என்ன?

Byadmin

Apr 22, 2026


காரெக்ஸ் தலைமை செயல் அதிகாரி கோ மியா கியாட்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கோ மியா கியாட்

இரான் போர் காரணமாகத் தங்களது தயாரிப்புகளுக்குத் தேவைப்படும் மூலப்பொருட்களின் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டால், விலையை 30 சதவீதம் அல்லது அதற்கும் மேலாக உயர்த்தப் போவதாக உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனமான ‘காரெக்ஸ்’ தெரிவித்துள்ளது.

இரான் போர் தொடங்கியதில் இருந்து உற்பத்தி செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக காரெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோ மியா கியாட் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மலேசியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், ஆண்டுக்கு ஐந்து பில்லியனுக்கும் அதிகமான அணுறைகளை உற்பத்தி செய்கிறது.

இது ‘டியூரெக்ஸ்’ மற்றும் ‘ட்ரோஜன்’ போன்ற முன்னணி உலகளாவிய பிராண்டுகளுக்கும், பிரிட்டனின் என்.எச்.எஸ் போன்ற அரசு சுகாதார அமைப்புகளுக்கும் விநியோகம் செய்கிறது.

ராய்ட்டர்ஸ் மற்றும் புளூம்பெர்க் ஆகியவற்றுக்கு அளித்த பேட்டியில் கோ இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசி அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளது.

By admin