• Wed. Jul 8th, 2026

24×7 Live News

Apdin News

கார்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரப்பது ஆபத்தானதா? என்ன செய்ய வேண்டும்?

Byadmin

Jul 8, 2026


மன அழுத்த ஹார்மோன், கார்டிசோல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆசிரியர் குழு
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சமூக ஊடகங்களில் பெரும் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டு வரும் இந்த ‘மன அழுத்த ஹார்மோன்’, தற்போது “கார்டிசோல் முகம்” மற்றும் “கார்டிசோல் உடல்” போன்ற புதிய சொற்கள் உருவாகக் காரணமாகியுள்ளது.

இணையத்தில் பகிரப்படும் பல பதிவுகளின்படி, முகத்தின் வடிவத்தை மாற்றுவது, உடல் எடையை அதிகரிப்பது மற்றும் முடி உதிர்தல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்குக் கார்டிசோல் ஹார்மோனே காரணமாகக் கூறப்படுகிறது.

மன அழுத்தம், கார்டிசோல் மற்றும் முகம்/உடல் வீக்கத்துக்கு இடையே உள்ளதாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்தும், இந்த ஹார்மோனின் அளவைக் கட்டுப்படுத்துவது மற்றும் குறைப்பது எப்படி என்பது குறித்தும் பல பயனர்கள் தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், உண்மையில் கார்டிசோல் என்றால் என்ன? சமூக ஊடகங்கள் சித்தரிப்பது போல அது நிஜமாகவே ஒரு வில்லன்தானா?

“கார்டிசோல் என்பது நாம் உயிர்வாழத் தேவையான ஒரு அத்தியாவசிய ஹார்மோன் ஆகும். ஆனால் அது நிச்சயமாக ஒரு வில்லன் அல்ல. மேலும் நம் உடலைப் நாம் அந்த விதத்தில் பார்க்கக்கூடாது,” என்று மருத்துவ நிபுணரும் பிபிசி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜாண்ட் வான் டுல்லெகன் கூறுகிறார்.

By admin