• Sun. Sep 22nd, 2024

24×7 Live News

Apdin News

காலநிலை மாற்றம்: மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் மனித தலையீட்டால் சந்திக்கும் புதிய சவால்

Byadmin

Sep 16, 2024


மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் சந்திக்கும் அதீத பிரச்னைகள் : மனித குறுக்கீடு அறிய இனங்களை அழிவுக்கு கொண்டு செல்லுமா?

பட மூலாதாரம், Girish Punjabi/WCT/Maharashtra Forest Department

தெற்கு கோவாவில் `மொல்லம்’ என்ற அடர்ந்த காடு அமைந்துள்ளது. இந்தக் காட்டின் நடுவே இப்போது கர்நாடகாவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே காடு இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. மனித இனம் பரந்து விரிந்திருந்த காட்டின் மீது அதன் அதிகாரத்தை நிலைநாட்டிவிட்டது.

நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களின் சத்தம் இந்த காட்டின் அமைதியைக் சீர்குலைத்துள்ளது. இதனால் பறவைகள் மற்றும் விலங்குகளின் சத்தம் காணாமல் போய்விட்டது.

தற்போது இந்த ஒரு வழி நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் நிகழ்ந்துள்ளது. கோவா மற்றும் கர்நாடகாவை இணைக்க நான்கு வழி நெடுஞ்சாலை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. எனவே காட்டில் சாலையின் அகலம் இன்னும் அதிகரிக்கப்படும்.

இந்த நான்கு வழிச் சாலை பகவான் மஹாவீர் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசிய பூங்கா பகுதியில் உள்ளது.

By admin