• Sun. Jun 21st, 2026

24×7 Live News

Apdin News

கால்பந்து விளையாட்டில் ஹெட்டிங் செய்வது மூளையை பாதிக்குமா? புதிய ஆய்வில் தகவல்

Byadmin

Jun 21, 2026


கால்பந்து விளையாட்டில் ஹெட்டிங் செய்வது மூளையை பாதிக்குமா? புதிய ஆய்வில் தகவல்

பட மூலாதாரம், Loughborough University

    • எழுதியவர், டான் ரோன்
    • பதவி, விளையாட்டு ஆசிரியர், பிபிசி ஸ்போர்ட்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கால்பந்து விளையாட்டில் பந்தை தலையால் முட்டும் ஹெட்டிங் செயல்பாட்டால் ஏற்படும் மூளை பாதிப்புகளைக் குறைக்க, எதிர்காலத்தில் கால்பந்துகள் மறுவடிவமைப்பு செய்யப்படலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கால்பந்து வீரர்கள் பந்தை ஹெட்டிங் செய்யும்போது, அது மூளைக்குள் ஆற்றலைக் கடத்தும் ஓர் அழுத்த அழையை (pressure wave) உருவாக்கக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ராணுவத் துப்பாக்கிச் சூடு, வெடிப்புகளின்போது ஏற்படும் அழுத்த அலைகளுக்கு “இணையானதாக” இந்த ஆற்றல் பரிமாற்றம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

‘தி ஃபுட்பால் அசோசியேஷன்’ அமைப்பின் ஆதரவுடன், லஃப்ரோ பல்கலைக்கழக ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சில கால்பந்துகள் மற்றவற்றுடன் ஒப்பிடும்போது 55 மடங்கு அதிக அழுத்த அலையை உருவாக்கக்கூடும் என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

இந்த ஆய்வுக்காக, கடந்த 100 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கால்பந்துகளை விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். உண்மையான கால்பந்து போட்டிகளின்போது காணப்படும் வேகத்தில் இந்தப் பந்துகளைப் பயன்படுத்தி, மனிதத் தலையைப் பிரதிபலிக்கும் மேம்பட்ட செயற்கைத் தலை மாதிரியில் அவற்றின் தாக்கத்தை ஆய்வாளர்கள் பரிசோதித்தனர்.

இந்த மாதிரியின் உள்ளே ஆய்வுக் குழு ஒரு சிறப்பு அழுத்த உணரியை (pressure sensor) பொருத்தினர். இந்த உணரியைப் பயன்படுத்தி, இதற்கு முன் பதிவு செய்யப்படாத ஓர் அழுத்த அலையை அவர்கள் கண்டறிந்தனர். இந்த அலை மூளையின் முன்பகுதிக்கு ஆற்றலைச் செலுத்துகிறது. அடுத்தடுத்து நிகழும் குறைந்த அளவிலான ராணுவ வெடிப்புத் தாக்கங்கள் குறித்த ஆய்வுகளுடன் ஒப்பிடுகையில், தங்கள் கண்டுபிடிப்புகள் கவலைக்குரியதாக இருப்பதாக ஆய்வுக் குழுவின் முதன்மை ஆராய்ச்சியாளர் முனைவர் இயுவான் பிலிப்ஸ் பிபிசி ஸ்போர்ட்டிடம் தெரிவித்தார்.

By admin