சசி தரூர் கண்டனம்:
வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர், பிரிட்டாஸிடம் நடந்துகொள்ளப்பட்ட விதம் குறித்துக் கண்டனம் தெரிவித்ததுடன், இது குறித்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தினார்.
“இது அதிர்ச்சியளிக்கிறது. ஜான் பிரிட்டாஸ் மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் மதிப்புமிக்க, தீவிரமாக செயல்படும் உறுப்பினர் ஆவார்.
அக்குழுவின் தலைவராக, ஒரு சிறந்த உறுப்பினரிடம் நடந்துகொள்ளப்பட்ட இந்த மோசமான நடத்தையை கண்டிப்பதோடு, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு டெல்லி காவல் துறையை வலியுறுத்துகிறேன். ஜனநாயகத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய காவல் பணி சார்ந்த நெறிமுறைகள் உள்ளன!” என்று முன்னாள் மத்திய அமைச்சரான சசி தரூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.