• Mon. Oct 12th, 2026

24×7 Live News

Apdin News

ஹிமாஸ்ரீ போரா: ஆந்திராவில் இந்த அசாம் பெண்ணுக்கு என்ன நடந்தது?

Byadmin

Oct 12, 2026


ஹிமாஸ்ரீ போரா

படக்குறிப்பு, ஹிமாஸ்ரீ போரா

நடன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அசாமில் இருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினம் வந்திருந்த ஹிமாஸ்ரீ போரா, தேர்வுகளை எழுதுவதற்காகத் தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டார்.

கன்னியாகுமரிக்கும் திப்ருகருக்கும் இடையே இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, தான் பயணித்த பெட்டியில் சில ஆண்கள் மது அருந்திக் கொண்டிருப்பதால் அச்சமாக இருப்பதாகக் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அவரது செல்போனை தொடர்புகொள்ள முடியவில்லை.

மறுநாள், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ரயில் தண்டவாளம் அருகே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அக்டோபர் 5-ஆம் தேதி மாலை முதல் அக்டோபர் 7-ஆம் தேதி காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் இந்தச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

By admin