• Sun. Oct 11th, 2026

24×7 Live News

Apdin News

ராமாயணா வெளியீடு தேதி அறிவிப்பு… விஜயதசமியன்று தொடங்கும் முன்பதிவு!

Byadmin

Oct 11, 2026


நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள ராமாயணா படத்தின் முதல் பாகம், தீபாவளி பண்டிகையையொட்டி நவ.5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தசரா அன்று டிக்கெட் முன்பதிவுகள் தொடங்குகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

இந்துக்களின் இதிகாச புராணங்களில் ஒன்றாக ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், கே.ஜி.எஃப் புகழ் யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட் புகழ் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைக்கின்றனர். முதல் பாகம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளநிலையில், இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகிறது.

படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஐமேக்ஸ் மற்றும் பிற பிரீமியம் வடிவங்களிலும் வெளியாகிறது.

By admin