• Sun. Oct 11th, 2026

24×7 Live News

Apdin News

அறிவிக்கப்படாத அவசரநிலை போல் உள்ளது.. மக்கள் உரிமைகளுக்கு எதிராக போர் தொடுத்துள்ளது மத்திய அரசு – சிஜேபி

Byadmin

Oct 11, 2026


மத்திய அரசு அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளது என சிஜேபி குற்றமசாட்டியுள்ளது.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

இவ்வளவு பயந்த சுபாவமுள்ள ஒரு பிரதமரை நாடு இதுவரை கண்டதில்லை என்றும், மோடி அரசு தனது சொந்த மக்கள் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளது என்றும் சிஜேபி செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியது.

ராணுவத் தளமாக டெல்லி

காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நாட்டில் நிலவும் சூழ்நிலை, அறிவிக்கப்படாத அவசரநிலையை போன்றது என்று சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் குற்றம் சாட்டினார்.

டெல்லியில் நடப்பது ஒரு அப்பட்டமான காவல்துறை ஆட்சி. டெல்லியில் குடிமக்களின் நடமாடும் சுதந்திரம் மற்றும் போராட்டம் நடத்தும் ஜனநாயக உரிமைகள் மிதிக்கப்பட்டு, அடிப்படை உரிமைகளின் பெரும் மீறல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகத் தலைநகரை ஒரு ராணுவத் தளமாக மாற்றிய பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

போராட்டம்

அரசியலமைப்பு ரீதியான அமைப்பான தேர்தல் ஆணையம், மோடியிடம் முழுமையாகச் சரணடைந்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ஊழலுக்கு எதிரான போராட்டம் இத்தோடு முடிந்துவிடவில்லை; போராட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

நான்கு முன்னாள் முதலமைச்சர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மாணிக் சர்க்கார் மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் வீதிகளில் இறங்கி இளைஞர்களுடன் நின்றதே, ஜனநாயகத்தைகாப்பாற்றுவதற்கான அவர்களின் போராட்டத்திற்கு ஒரு சான்றாகும்” என்றார்

By admin