• Sun. Oct 11th, 2026

24×7 Live News

Apdin News

‘த்ரிஷ்யம்’ படம் இந்திய திரையுலகில் செய்த மாயாஜாலம் என்ன? ஒரு சாதாரண குடும்பம் ரசிகர்களை வசீகரித்த கதை

Byadmin

Oct 11, 2026


த்ரிஷ்யம், பேமிலி த்ரில்லர், இந்தியர்களை கவர்ந்தது எப்படி?

படக்குறிப்பு, மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் நாயகன் ஜார்ஜ் குட்டியின் குடும்பம்

பிரபலமான கலாசாரம் மற்றும் மீம்களின் உலகில், அக்டோபர் 2 என்ற தேதிக்கு மற்றொரு அர்த்தமும் உண்டு – அதுதான் ‘த்ரிஷ்யம்’.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு 2022 இல் தியேட்டர்கள் மீண்டும் திறக்கத் தொடங்கியபோது, பார்வையாளர்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற கேள்வி பலமுறை எழுப்பப்பட்டது.

ஓடிடி தளங்கள் வளர்ச்சியின் தாக்கம், பார்வையாளர்களின் மாறுபட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் நீண்டகாலப் பெருந்தொற்று ஆகியவை திரைப்படத்துறைக்கு நெருக்கடியை கொடுத்திருந்த நிலையில், தியேட்டர்களுக்குப் பார்வையாளர்களை ஈர்த்ததன் மூலம் திரையரங்குகளை மீண்டும் உயிர்ப்பித்த முக்கியப் படம் ‘த்ரிஷ்யம் 2’ ஆகும்.

₹345 கோடி வசூலுடன், அந்த ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய படமாக ‘த்ரிஷ்யம் 2’ திகழ்ந்தது.

ஒரு சாதாரண குடும்பத்தின் இந்த அசாதாரண கதையில் என்ன மாயம் இருக்கிறது? இந்த சஸ்பென்ஸ் புதிருக்குள் மக்கள் ஏன் மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகிறார்கள்?

By admin