பட மூலாதாரம், X/Pinky Bhaiya
-
- எழுதியவர், சுபாங்கி மிஸ்ரா
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது, தங்களை இந்துத்துவ அமைப்புகளின் தொண்டர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் போராட்டக்காரர்களை தாக்கும் வீடியோக்கள் சனிக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியாயின.
அவற்றில் ஒரு வீடியோவில், ஒரு பெண் அழுதுகொண்டே தான் தாக்கப்பட்டதாகக் கூறுவதைக் காண முடிகிறது. காவல்துறை உங்களை பாதுகாத்ததா என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்று அவர் பதிலளிக்கிறார்.
இந்துத்துவ அமைப்பான ‘இந்து ரக்ஷா தளம்’ -இன் தேசியத் தலைவரான பூபேந்தர் சௌத்ரி (இவர் ‘பிங்கி பையா’ என்றும் அழைக்கப்படுகிறார்), அந்தப் பெண்ணைத் தாக்கும் நபர்கள் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறி அந்த வீடியோவை ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்தார்.
“அனைத்து கரப்பான் பூச்சிகளையும் (எதிர்ப்பாளர்களைக் குறிக்கும் வகையில்) வரிசைப்படுத்தும் வலிமை இந்து ரக்ஷா தளத்திற்கு உள்ளது; அதைத் தொடர்ந்து செய்வோம்,” என்று அவர் தனது ட்வீட்டில் எழுதியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 1
வீடியோவில் காணப்படும் ஒரு பத்திரிகையாளர், பாதிக்கப்பட்ட பெண்ணை “சோட்டி பச்சி” அதாவது ‘சிறுமி’ என்று குறிப்பிடுவதையும் காண முடிகிறது.
சமூக ஊடகங்களில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை இந்தச் சம்பவத்தை தாமாகவே முன்வந்து கவனத்தில் கொண்டு, நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
கமலா மார்க்கெட் காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர், அந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டதை பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.
வீடியோவில் தாக்கப்பட்ட நபர் 18 வயதுக்குட்பட்டவரா என்பதை அந்த அதிகாரியால் உறுதிப்படுத்த முடியவில்லை. “நாங்கள் தற்போது இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகிறோம், பாதிக்கப்பட்ட நபரைத் தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளுடன், அமைதியைப் பேணுவதற்கான பாதுகாப்பு (பிரிவு 126), காயத்தை ஏற்படுத்துதல் (பிரிவு 115) மற்றும் தாக்குதல் (பிரிவு 130) ஆகியவற்றின் கீழ் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்குப் பிறகு கூடுதல் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படும் என்று மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிபிசியிடம் முதல் தகவல் அறிக்கையின் நகல் இல்லை.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்?
வன்முறை தொடர்பான காணொளி இணையத்தில் பரவலானதைத் தொடர்ந்து, இந்திய இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பல சமூக ஊடகக் கணக்குகள் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டிப் பதிவுகளை வெளியிட்டன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 3
முரண்பாடான விஷயம் என்னவென்றால், சமூக ஊடகங்களில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்த போதிலும், அவர்களே தாமாக முன்வந்து தங்களை அடையாளம் காட்டிக்கொண்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கபில் குமாரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், அவரும் குற்றம்சாட்டப்படும் மற்றொரு நபரான ரவீந்தர் சிங்கும் காணப்படுகின்றனர்; அந்தக் காணொளிக்கு “நாங்கள் கரப்பான் பூச்சிகளை நன்றாக நடத்தினோம்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.
“நாங்கள் மோதி மற்றும் டெல்லி காவல்துறையின் ஆதரவாளர்கள், ஆனாலும் அவர்கள் எங்களைக் கைது செய்துள்ளனர். அவர்களின் கௌரவத்தைக் காக்க வந்திருந்தும் அவர்கள் எங்களைக் கைது செய்துள்ளனர்.” என்று அந்த காணொளியில் அவர்கள் கூறுவதைக் கேட்க முடிகிறது.
குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான ராமன் சைனியைத் தொடர்புகொள்ள பிபிசி முயன்றது, ஆனால் அவரது அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
பிங்கி பையாவிடம் பிபிசி தொடர்பு கொண்டபோது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். “இவர்கள் எங்களுடன் தொடர்புடையவர்களா இல்லையா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பிறகு, ரவீந்தர் சிங் தான் ‘இந்து ரக்ஷா தளம்’ அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறினார்; காவலர்கள் அவரை அழைத்துச் செல்லும் காணொளி ஒன்றில் அவர் அவ்வாறு கூறுவது பதிவாகியுள்ளது.
“என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். உயர் அதிகாரிகள் அனைவருக்கும் என்னைத் தெரியும்,” என்று ‘ஈடிவி பாரத் டெல்லி’ வெளியிட்ட காணொளி ஒன்றில் அவர் கூறுவதைக் கேட்க முடிகிறது. “நான் திரும்பிச் சென்று அந்த ‘கரப்பான் பூச்சிகளை’ – அதாவது தேசவிரோத முழக்கங்களை எழுப்பி டெல்லி காவல்துறையை அவமதிப்பவர்களை – வழிக்குக் கொண்டுவருவேன். நான் அவர்களைச் சரிசெய்வேன். இந்து ரக்ஷா தளம் பின்வாங்காது,” என்று அவர் கூறுகிறார். ஒரு காணொளியில், போராட்டக்காரர் ஒருவரை ரவீந்தர் சிங் அறைவதையும் நாங்கள் கண்டோம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 4
போராட்டத்தின் ஒரு முக்கியக் களம்
ஆயிரக்கணக்கான துணை ராணுவ மற்றும் காவல் படையினரால் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள மத்திய டெல்லியின் கன்னோட் பிளேஸ் பகுதியில், அங்கு வருகை தரும் போராட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.
நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்படும் அதே வேளையில், ‘இந்து ரக்ஷா தளம்’ போன்ற இந்துத்துவக் குழுக்கள் மீது டெல்லி காவல்துறை விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்று போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் விமர்சித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் சனிக்கிழமை வெளியான காணொளிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாங்கள் வன்முறையில் ஈடுபட்டதாக இந்துத்துவக் குழு உறுப்பினர்களின் சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பல காணொளிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே காவல்துறையின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. உதாரணமாக, சனிக்கிழமை ‘எக்ஸ்’ தளத்தில் ‘பிங்கி பையா’ என்பவர் வெளியிட்ட மற்றொரு காணொளியில், “இந்து ரக்ஷா தளத்தைக் சீண்ட வேண்டாம் என்று நான் சொல்லியிருந்தேன்; இந்து ரக்ஷா தளம் உங்களை சும்மா விடாது.” என்று கூறியிருந்தார்.
சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்திற்கு முந்தைய நாட்களிலேயே, “சனாதனத்திற்கு எதிரானவர்கள்” மீது வன்முறையை ஏவுவதாக மிரட்டும் வகையிலான பல காணொளிகளை அவர் வெளியிட்டிருந்தார். பத்திரிகையாளர் தைர்ய மகேஸ்வரி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட ஒரு காணொளியில், போராட்டக்காரர் ஒருவர் சுற்றி வளைக்கப்பட்டு ‘மன்னிப்பு’ கேட்க வைக்கப்பட்ட காட்சி இடம்பெற்றிருந்தது.
‘தி குயின்ட்’ ஊடகம் ரிதேஷ் தாக்கூர் என்ற நபரை நேர்காணல் செய்தது; அவர் தன்னை பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன், அந்தப் போராட்டத்தில் தங்கள் அமைப்புடன் தொடர்புடைய 250 பேர் கலந்துகொண்டதாகவும் கூறினார்.
“இவர்கள் கடந்த காலங்களில் ராமர் மற்றும் சீதை குறித்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இனி அப்படிச் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் அந்த வீடியோவில் கூறினார்.
அக்டோபர் 10 அன்று மத்திய டெல்லியில் நடைபெற்ற இத்தகைய மோதல்களை அங்கிருந்த பிபிசி செய்தியாளர்களும் நேரில் கண்டனர்.
“அது ‘காக்ரோச் ஜனதா கட்சி’யாக இருந்தாலும் சரி, ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி – யாராக இருந்தாலும், நாட்டைப் பிளவுபடுத்தும் செயலில் ஈடுபட்டால் நாங்கள் பின்வாங்க மாட்டோம்,” என்று ஒரு போராட்டக்காரர் கூறினார்.
“இந்த ‘கரப்பான் பூச்சிகளால்’ டெல்லி ஸ்தம்பித்துவிட்டது, எல்லா வேலைகளும் முடங்கிவிட்டன,” என்று மற்றொருவர் கூறினார்.
போராட்டக்காரர்களுக்கும் அவர்களை எதிர்க்க வந்தவர்களுக்கும் இடையே நிலவிய பதற்றமான சூழலைச் சித்தரிக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவின.
“நாங்கள் தொடர்ந்து போராடினால் அடிப்போம் என்றும், நாங்கள் இங்கு சட்டவிரோதமாக வந்துள்ளோம் என்றும் அவர்கள் [வலதுசாரி ஆதரவாளர்கள்] கூறுகிறார்கள்,” என்று கன்னோட் பிளேஸில் உள்ள இந்திரா சௌக் பகுதியில் வலதுசாரி குழுக்களுடன் மோதலில் ஈடுபட்ட போராட்டக்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இதற்கிடையில், சிஜேபிபோராட்டத்தோடு தொடர்புடைய 20 முதல் தகவல் அறிக்கைகளை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது; இதில் காவலர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்குகளும் அடங்கும்.
அவற்றில், போராட்டத்தின் போது பெண்களைத் தவறாக நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ‘இந்து ரக்ஷா தள்’ அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் மீதான வழக்கும் அடங்கும் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு