0
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுப்பயணிகள் மீது தாக்குதல் நடத்திய மூவரை இந்தியப் பாதுகாப்புப் படை கொன்றுவிட்டதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
ஆயுதமேந்திய அந்த 3 பயங்கரவாதிகளும் நேற்று நடத்தப்பட்ட இந்திய இராணுவ நடவடிக்கையின்போது கொல்லப்பட்டதாக அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இந்திய பாராளுமன்றத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட மூவரும் பாகிஸ்தானியர்கள் ஆவார். அவர்களில் இருவர் Lashkar-e-Taiba எனும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த மூவரும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதற்கான வலுவான ஆதாரங்கள் இந்தியப் பாதுகாப்பு அமைச்சிடம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஸ்ரீநகரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் டச்சிகம் என்ற மலைப்பகுதியில் இந்தியப் பாதுகாப்புப் படை நேற்று (29) இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
ஏப்ரல் 22ஆம் திகதியன்று காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பெஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் நேப்பாளத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஏனைய அனைவரும் இந்தியப் பிரஜைகள் ஆவார்.