• Fri. Jul 31st, 2026

24×7 Live News

Apdin News

காஸாவில் ஆயுதங்களை கைவிட ஹமாஸ் ஒப்புதல் – இஸ்ரேல் கூறுவது என்ன? டிரம்ப் கூறியது என்ன?

Byadmin

Jul 31, 2026


2026 பிப்ரவரியில் வாஷிங்டனில் நடந்த அமைதி வாரியக் கூட்டத்தின் போது அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, 2026 பிப்ரவரியில் வாஷிங்டனில் நடந்த அமைதி வாரியக் கூட்டத்தின் போது அதிபர் டொனால்ட் டிரம்ப்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

காஸாவில் ஹமாஸ் மற்றும் இதர ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை முழுமையாக கைவிடவும், இஸ்ரேல் தனது படைகளை விலக்கிக் கொள்ளவும் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது அமைதி வாரியம் இதனை சாதித்திருப்பதாகவும், இது “காஸா ஒரு புதிய பாலத்தீன அரசாங்கத்தால் ஆளப்படுவதை நோக்கிய ஒரு முக்கியமான படி” என்றும் டிரம்ப் கூறினார்.

காஸாவில் முழுமையாக ஆயுதங்களைக் கைவிடுவதற்கான அமைதி வாரியத்தின் திட்டத்திற்குத் தாங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இஸ்ரேல் இது குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

“ஆயுதத்தை கைவிடும் படிநிலை முடிந்ததும்” இஸ்ரேல் துருப்புகள் காஸாவிலிருந்து வெளியேறும் என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த காஸா போர்நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்தில் ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்டத்தில் காஸா மறுசீரமைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.

எகிப்து, கத்தார் மற்றும் துருக்கிக்கு டிரம்ப் நன்றி

“டிரம்பின் 20 அம்சத் திட்டத்தை செயல்படுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த ஒப்பந்தம் கவனமாக வடிவமைக்கப்பட்ட கட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்” என ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார்.

By admin