கிளிநொச்சி பொலிஸ் நிலைய விசாரணைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்
இவர், குடும்பப் பிரச்சனையை ஒட்டிய விசாரணைகளுக்காக இன்று பொலிஸாரால் அழைத்து வரப்பட்டிருந்தார்.
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நேரத்தில், தான் அணிந்திருந்த சட்டையின் ஒரு பகுதியைக் கிழித்து, விசாரணைக் கூண்டுக்குள் இன்று மதியம் 12.08 மணியளவில் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துள்ளார்.
உயிரிழந்தவர் கிளிநொச்சி ரயில் நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு (வயது 66) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தூக்கிட்டுச் சாவு! appeared first on Vanakkam London.