• Mon. Jul 21st, 2025

24×7 Live News

Apdin News

கிழக்கின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆளுருடன் இராணுவத் தளபதி பேச்சு!

Byadmin

Jul 21, 2025


இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் பாதுகாப்பு விடயங்களில் இராணுவத்தின் ஈடுபாடு மற்றும் பொதுமக்களுடனான அதன் ஒத்துழைப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

கிழக்கு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பல்லேகும்புர மற்றும் 22 ஆவது காலாட்படை பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் பெரேரா ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

By admin