• Thu. Jul 3rd, 2025

24×7 Live News

Apdin News

கீழடி: 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களின் முகம் இதுதானா? – விளக்கும் ஆய்வாளர்கள்

Byadmin

Jul 3, 2025


2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களின் முகங்கள் எப்படி இருந்தன?

பட மூலாதாரம், Facelab/Liverpool John Moores University

படக்குறிப்பு, கீழடி பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் முகங்கள் 3டி டிஜிட்டல் முறையில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

கீழடி அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த இரண்டு ஆண்களின் மண்டை ஓடுகளை வைத்து, அவர்களின் முக அமைப்புகளை அறிவியல் ரீதியாக ஆய்வாளர்கள் மறு உருவாக்கம் செய்துள்ளனர்.

கணினி உதவியுடன் கூடிய 3 டி முறையில், பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைகழகம் மறு உருவாக்கம் பணிகளை செய்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைகழகம் அளித்த தரவுகளை வைத்து இந்த முகங்கள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் மண்டை ஓடுகள் பெரும்பாலும் சேதம் இல்லாமல் இருந்துள்ளன.

தென்னிந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் நடமாடிய மனிதர்களின் முகங்கள் மறு உருவாக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என்று மதுரை காமராஜர் பல்கலைகழக மரபியல் துறைத் தலைவர் ஜி குமரேசன் கூறுகிறார்.

By admin