• Sun. May 31st, 2026

24×7 Live News

Apdin News

குஜராத் டைட்டன்ஸ் ஆர்சிபியை வீழ்த்த இந்த 5 விஷயங்கள் உதவுமா? ஐபிஎல் இறுதிப்போட்டி

Byadmin

May 31, 2026


RCB vs GT, சுப்மன் கில், ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல், இறுதிப்போட்டி, சாய் சுதர்ஷன், விராட் கோலி

பட மூலாதாரம், ANI

2026 ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்கிறது குஜராத் டைட்டன்ஸ். குவாலிஃபயர் 1 போட்டியில் ஆர்சிபி-க்கு எதிராகத் தோற்றிருந்தாலும், குவாலிஃபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது அந்த அணி.

இந்த சீசன் தொடங்கியபோது குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறும் என்று உண்மையாக நான் எதிர்பார்க்கவில்லை. அந்த அணியில் சில ஓட்டைகள் இருந்தன. ஆனால், அதையும் மீறி, தங்கள் கைவசம் இருந்தவற்றை முழுமையாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தி இந்த இடத்துக்கு அந்த அணியை எடுத்து வந்திருக்கிறது ஆசிஷ் நெஹ்ராவின் பயிற்சியாளர் குழு. அதற்காக நிச்சயம் அவர்களைப் பாராட்டியே தீரவேண்டும்.

இந்த சீசனை சற்று மெதுவாகவே தொடங்கியிருந்தது குஜராத் டைட்டன்ஸ். முதல் 7 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது அந்த அணி. ஆனால், அதன்பிறகு பெரும் எழுச்சி கண்ட அந்த அணி, கடைசி 7 லீக் போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்றது. நெட் ரன்ரேட் பல அணிகளின் இடத்தை நிர்ணயித்த நிலையில், லீக் சுற்றில் அவர்கள் பெற்ற கடைசி 3 வெற்றிகளுமே 70 ரன்களுக்கும் மேல் வந்தவை. அது அவர்களை டாப் 2 இடங்களில் முடிக்க வைத்தது. அவர்களுக்கு பிளே ஆஃப் சுற்றில் 2வது வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தது.

இப்படி தேவைப்படும் நேரத்தில் தேவைப்பட்ட செயல்பாடுகளைக் கொடுத்து, சரியான கட்டத்தில் எழுச்சி பெற்று தற்போது கோப்பைக்கு மிகவும் அருகில் வந்திருக்கிறது டைட்டன்ஸ்.

அவர்களின் இந்த எழுச்சி மிகு செயல்பாட்டுக்குக் காரணமாக இருந்த 5 விஷயங்கள் என்ன? இந்த இறுதிப் போட்டியில் அவர்கள் என்ன யுக்தியைக் கையாள வேண்டும்?

By admin