பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது இந்தியாவின் மிகப்பெரிய விளம்பர தூதராக மாறியுள்ளார் என்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் உலக அரங்கில் இந்தியா என்றாலே மகாத்மா காந்தி மட்டுமே நினைவுக்கு வந்த நிலை மாறி, கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் உலகளாவிய அடையாளமாக மோடி உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் கஜேந்திர சிங் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள், தங்களை நேரடியாக இந்தியர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளத் தயங்கி, முதலில் தங்களை ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்திருந்தனர்.
பல தசாப்தங்களாக வெளிநாடுகளில் இந்தியாவின் அடையாளம் மகாத்மா காந்தியுடன் மட்டுமே பிணைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டினர் இந்தியாவைக் குறிப்பிடும்போது ‘ஓ, மிஸ்டர் காந்தி’ என்று கூறும் அளவிற்கு நாட்டின் பிம்பம் அதற்குள் சிக்கியிருந்தது.
ஆனால் இன்று நீங்கள் அமெரிக்கா முதல் மிகச்சிறிய கரீபியன் தீவுகள் வரை, தெற்காசியா முதல் மேற்கு ஆசியா வரை உலகின் எந்தப் பகுதிக்குச் சென்று ‘நான் இந்தியாவில் இருந்து வருகிறேன்’ என்று கூறினாலும், வெளிநாட்டினரின் முகத்தில் ஒரு புன்னகை மலர்கிறது; அவர்கள் உடனடியாக ‘ஓ, மிஸ்டர் மோடி’ என்று வியந்து கூறுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.