• Sun. May 31st, 2026

24×7 Live News

Apdin News

“நான் சாக வேண்டும் என்று மல்யுத்த சம்மேளனம் விரும்புகிறது” – வினேஷ் போகத் பரபரப்பு பேட்டி

Byadmin

May 31, 2026


இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் போட்டியிட விரும்பினார்.

ஆனால், 53 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க இந்திய மல்யுத்த சம்மேளனம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் வரை சென்று வினேஷ் போகத் முறையிட்டார். உச்சநீதிமன்றம் ஆசிய போட்டிக்கான தகுதிச் சுற்று தொடரில் பங்கேற்க அனுமதி அளித்தது.

அதனடிப்படையில் வினேஷ் போகத் பங்கேற்று விளையாடி வருகிறார். முதல் சுற்றில் ஜோதியை 7-1 என எளிதாக வீழ்த்தினார். அதன்பின் காலிறுதியில் நிஷு உடன் மோதினார். இதில் நிஷு கடும் சவாலாக விளங்கினார். இதில் 7-6 என வினேஷ் போகத் வெற்றி பெற்றார்.

அரையிறுதியில் மீனாட்சியை எதிர்கொண்டார். இதில் 4-6 என போகத் தோல்வியடைந்தார். இதனால் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

By admin