முன்னதாக மே 3 நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவை தொடர்ந்து ரத்தானது.
அதேபோல் சிபிஎஸ்சி தேர்வு விடைத்தாள் திருத்தும் முறையிலும் அண்மையில் குளறுபடி கண்டறியப்பட்டது. இதேபோல SSC தேர்விலும் குளறுபடி கண்டறியப்பட்டது.
இந்த தொடர் குளறுபடிகளை கண்டித்து ராகுல் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “NEET. CBSE. SSC. இன்று, CUET. நான்கு தேர்வுகள். ஒரு கோடி மாணவர்கள். இவற்றில் ஒன்று கூட நேர்மையாக நடத்தப்படவில்லை.
தன்னை ஒரு “விஸ்வ குரு” (உலகத் தலைவர்) என்று பறைசாற்றிக்கொள்ளும் அதே வேளையில், நாட்டிற்குள் ஒரே ஒரு தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை. மோடி அவர்கள் ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பையுமே முற்றிலுமாகச் சீரழித்துவிட்டார்.
எந்தத் தலைமுறையின் எதிர்காலத்தை நீங்கள் சீரழித்துக்கொண்டிருக்கிறீர்களோ அதே தலைமுறைதான் உங்களைப் பொறுப்புக் கூற வைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடந்த நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களில் பிரதமர் மௌனம் காப்பது மிகப்பெரிய தவறு என்று கூறிய ராகுல் காந்தி, இது தொடர்பாக மாணவர்களுடன் தான் நடத்திய கலந்துரையாடல் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.