• Sat. May 30th, 2026

24×7 Live News

Apdin News

முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை 200 ரன்னில் கட்டுப்படுத்தியது பாகிஸ்தான்

Byadmin

May 30, 2026


ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 55 ரன்னில் அவுட்டானார்.

மேட் ரென்ஷா நிதானமாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 44.1 ஓவரில் 200 ரன்களை மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் சார்பில் அராபத் மினாஸ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். அப்ரார அகமது 2 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராப், சல்மான் ஆகா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

By admin