• Sat. May 30th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

Byadmin

May 30, 2026


நடுத்தர மக்களின் பெரும் கனவான பணத்தை மையப்படுத்தி கற்பனையுடன் தயாராகி இருக்கும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பிராடு பயலே..’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன், சாக்ஷி வைத்யா , வி டி வி கணேஷ், ராதா ரவி, அருள்தாஸ், தம்பி ராமையா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி வித் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இத்திரைப்படத்தின் அறிமுக காணொளி மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் தருணத்தில்… இப்படத்தில் இடம்பெற்ற ‘ஹே என் ஃப்ராடு பயலே..’ என தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத பின்னணி பாடகி சுப்லாஷினி பாடியிருக்கிறார்.

கதையின் நாயகன் மீது காதல் கொண்ட பெண்ணின் உணர்வை விவரிக்கும் பாடலாக .. மெல்லிசையுடன் உருவாகி இருக்கும் இந்த பாடல்.. காதலில் திளைத்திருக்கும் அனைத்து இளம் பெண்களின் விருப்பத்திற்குரிய பாடலாக இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

By admin