• Sat. May 30th, 2026

24×7 Live News

Apdin News

ஜிபிஎஸ் போர்: விமானப் பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல் – எச்சரிக்கும் நிபுணர்கள்

Byadmin

May 30, 2026


ஜிபிஎஸ் போர்: விமானப் பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல் – எச்சரிக்கும் நிபுணர்கள்

பட மூலாதாரம், Artur Rodionov

படக்குறிப்பு, ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் என்பது தற்போது எதிர்கொள்ள வேண்டிய ஒரு ‘வழக்கமான’ பிரச்னையாகிவிட்டதாக விமானி ஆர்தர் ரோடியோனோவ் கூறுகிறார்

    • எழுதியவர், பீட்டர் பால்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கடந்த வாரம், பிரிட்டிஷ் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலியை ஏற்றிச் சென்ற பிரிட்டிஷ் ராயல் விமானப் படையின் விமானம் ஒன்று, ரஷ்ய எல்லைக்கு அருகில் எஸ்டோனியாவின் மீது பறந்து கொண்டிருந்தபோது, ஓர் அசாதாரணமான சம்பவம் நிகழ்ந்தது.

பிபிசி உலக சேவையால் ஆய்வு செய்யப்பட்ட விமானப் பயணக் கண்காணிப்புத் தரவுகளின்படி, விமானத்தின் இருப்பிடம் மற்றும் இயக்க விவரங்களைப் பகிரும் அமைப்பான அதன் டிரான்ஸ்பாண்டர், திடீரென முற்றிலும் தவறான தகவல்களைக் காட்டத் தொடங்கியது.

சிறிது நேரத்திற்கு, அந்த அமைப்பு, விமானம் அது உண்மையில் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 300கி.மீ தொலைவில், ரஷ்ய பகுதிக்குள் ஆழமாகச் சென்றிருப்பதாகத் தவறாகக் காட்டியது.

மேலும், ரஷ்ய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள ஓர் ஏரிக்கு மேலே, விமானம் மணிக்கு வெறும் 11கி.மீ. வேகத்தில் மிக மெதுவாக நகர்வதாகவும் அந்தத் தரவுகள் தவறாகக் காட்டின.

ஆனால், இவை எதுவும் உண்மையில் நடக்கவில்லை. “ஜிபிஎஸ் ஸ்பூஃபிங்” என்று அழைக்கப்படும் ஜிபிஎஸ் ஏமாற்றுவேலை எனப்படும் ஒரு நுட்பத்தால் அந்த விமானம் பாதிக்கப்பட்டிருந்தது.

By admin