• Sun. May 31st, 2026

24×7 Live News

Apdin News

ஆர்சிபி-க்கு 2வது ஐபிஎல் கோப்பை வென்று கொடுப்பாரா கேப்டன் ரஜத் பட்டிதார்?

Byadmin

May 30, 2026


ஆர்சிபி-க்கு 2வது ஐபிஎல் கோப்பை வென்று கொடுப்பாரா கேப்டன் ரஜத் பட்டிதார்?

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பாபா இந்திரஜித்
    • பதவி, கேகேஆர் முன்னாள் வீரர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – இரண்டாவது ஐபிஎல் கோப்பையைக் குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை (மே 31) நடக்கும் ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. 17 ஆண்டு காலம் ஒரு கோப்பைக்காகக் காத்திருந்தவர்கள், தற்போது 2 ஆண்டுகளில் இரண்டாவது கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி மீண்டும் ஐபிஎல் கோப்பையை வெல்ல அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் ஒரு முக்கியமான துருப்புச் சீட்டாக இருப்பார் என்று நான் கருதுகிறேன்.

ரஜத் பட்டிதார் இந்த சீசனில் மிகச் சிறந்த செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார். இதுவரை 14 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 486 ரன்கள் எடுத்திருக்கிறார். அவருடைய சிறந்த ஐபிஎல் சீசனாக இது உருவெடுத்திருக்கிறது. தன்னுடைய ஆட்டத்தின் மூலம் போட்டிகளில் பெரும் தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.

நம்பர் 4 இடத்தில் வந்து விளையாடுவது எளிதான விஷயம் கிடையாது. ஆனால், அதை பட்டிதார் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார். அதிலும் 196.76 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவது அசாத்தியமானது. டாப் ஆர்டர் மற்றும் பந்துவீச்சைக் கடந்து ஆர்சிபி அணியின் செயல்பாட்டில் இவருடைய ஆட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

குவாலிஃபயர் 1 போட்டியில் இதே குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட முடியாது. 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசி முதல் அணியாக ஆர்சிபி-யை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் அவர். இந்த இறுதிப் போட்டியிலுமே அவர் இதுபோன்ற ஒரு இன்னிங்ஸ் ஆடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

By admin