• Sun. May 31st, 2026

24×7 Live News

Apdin News

26 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஆம்னி வேன் – மீட்கப்பட்ட வேனுடன் வெளிவந்த சடலங்களின் எச்சங்கள்

Byadmin

May 31, 2026


சீதா தேவியின் கூற்றுப்படி, 26 ஆண்டுகளுக்கு முன்பு, முனி லால் ஒரு திருமணத்திற்குச் செல்வதற்காகக் கிளம்பினார்.
படக்குறிப்பு, சீதா தேவியின் கூற்றுப்படி, 26 ஆண்டுகளுக்கு முன்பு, முனி லால் ஒரு திருமணத்திற்குச் செல்வதற்காகக் கிளம்பினார்.

    • எழுதியவர், நவ்ஜோத் கவுர், பிமல் சைனி
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் சங்கடம் தரலாம்.

“நான் 26 ஆண்டுகளாக என் கணவருக்காகக் காத்திருந்தேன். அவர் ஒரு நாள் வீடு திரும்புவார் என்று நம்பாமல் ஒரு நாள் கூடக் கடக்கவில்லை. ஆனால் இப்போது அவரது அஸ்தியை கண்டெடுத்த பிறகு என்னுடைய காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.”

பஞ்சாபின் ரூபார் மாவட்டத்திலுள்ள அனந்த்பூர் சாஹிப் அருகே இருக்கும் கோட்லா கிராமத்தைச் சேர்ந்த சீதா தேவி என்பவர் கூறிய உணர்வுபூர்வமான வார்த்தைகள் இவை. அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது முகத்தில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

இறுதியாக அவருக்குக் கிடைத்த செய்தி தனது கணவரின் இறப்பு பற்றியதாக இருந்தாலும், சீதா தேவி இப்போது ஒரளவு நிம்மதியை உணர்வதாகக் கூறுகிறார். ஏனெனில், 26 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கணவருக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரம் குறைந்தபட்சம் இப்போதாவது அவருக்குத் தெரிய வந்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் 2000ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி நிகழ்ந்தது. அன்று, சீதா தேவியின் கணவர் முனி லால், ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காகப் பயணம் செய்துகொண்டிருந்தார். ரூபாரில் இருந்து அனந்த்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த வாகனம் ‘பக்ரா கால்வாய்க்குள்’ விழுந்தது.

By admin