• Sun. Aug 23rd, 2026

24×7 Live News

Apdin News

குஜராத்: நகைக்கடையை திருடச் சென்ற இடத்தில் உள்ளே இருந்தபடி காவல்துறைக்கு போன் செய்தது ஏன்?

Byadmin

Aug 23, 2026


குஜராத், நகைக்கடை திருட்டு, விநோதம்

பட மூலாதாரம், Umargam Police Station

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

குஜராத்தில் வல்சார் மாவட்டம் உமார்காம் என்ற இடத்தில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் திருட்டுச் சம்பவம் விவாதப் பொருளாகியுள்ளது.

பொதுவாக காவல்துறையிடம் சிக்காமல் தப்பிக்கவே திருடர்கள் முயல்வார்கள். ஆனால், ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடந்த இந்தத் திருட்டின் போது, ​​திருடர்களே உதவி எண்ணை அழைத்து காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்த முழு விவரங்களையும் அறிய, பிபிசி குஜராத்தி இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பெற்றதுடன், சாட்சிகள் மற்றும் அதிகாரிகளிடமும் பேசியது.

காவல்துறை அதிகாரி அளித்த தகவலின்படி, ‘திருடர்கள்’ காவல்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சுமார் 18,000 ரூபாய் மதிப்பிலான ‘திருடப்பட்ட நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களுடன்’ அவர்கள் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டனர்.

என்ன நடந்தது?

சம்பவத்திற்கான சாட்சியும், புகார்தாரரின் நண்பருமான ஆகாஷ்பாய் பேசுகையில், “எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள சஞ்சன் பகுதியில் ‘பிஜே ஜூவல்லர்ஸ்’ என்ற நகைக்கடையை என் நண்பர் மனிஷும் அவரது குடும்பத்தினரும் நடத்தி வருகின்றனர். இந்தக் கடைக்கு நேர் எதிரே வசிக்கும் ஒரு நண்பரும் அவரது சகோதரரும், 19-ஆம் தேதி நள்ளிரவில் என்னையும் என் சகோதரரையும் அழைத்து, இரண்டு திருடர்கள் எலக்ட்ரிக் கட்டர் மூலம் பூட்டை உடைத்து கடைக்குள் நுழையவும் திருடவும் முயற்சிப்பதாகத் தகவல் தெரிவித்தனர். கடைக்கு நேர் எதிரே வசிக்கும் எங்கள் நண்பர் நிகில் கபாடியும் அவரது சகோதரருமே எங்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தனர்,” என்றார்.

By admin