குஜராத்தில் பாலம் உடைந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள்
குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. ஒரு லாரி அந்தரத்தில் தொங்குவதை வீடியோ காட்டுகிறது.
வதோதரா மாவட்டத்தில் உள்ள மஹி ஆற்றின் பாலம் புதன்கிழமை காலை இடிந்து விழுந்தது. இதனால், பாலத்தில் இருந்த சில வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.
ஆற்றில் விழுந்தவர்களையும், வாகனங்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் தற்போது வரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. ஆற்றைக் கடக்க வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு