• Sun. Aug 30th, 2026

24×7 Live News

Apdin News

குஜராத்: மற்ற மாநிலங்களிலும் நெட்வொர்க் அமைத்து போலி மாத்திரைகளை விற்ற கும்பல் கைது – போலியை அறிவது எப்படி?

Byadmin

Aug 30, 2026


 போலி ரத்த அழுத்த மாத்திரைகள் எவ்வளவு ஆபத்தானது? அவற்றை கண்டுபிடிப்பது எப்படி?

பட மூலாதாரம், Ahmedabad crime branch

உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்கு போலி மருந்துகளைத் தயாரித்தல், வாங்குதல் மற்றும் மாநிலங்களுக்கு இடையே விநியோகம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட மூன்று பேரை குஜராத் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன் (FDCA) இணைந்து ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, ஆகஸ்ட் 19-ஆம் தேதி நிகார்டியா ரிடார்ட் 10 (Nicardia Retard 10) என்ற போலி மருந்து விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பாக ஜேபி ரசாயனங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் லிமிடெட் நிறுவனம் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்திடம் ( எஃப்.டி.சி.ஏ) புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

போலி மருந்துகள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிந்து, இதில் தொடர்புடையவர்களை அடையாளம் காண குற்றப்பிரிவு மற்றும் எஃப்.டி.சி.ஏ சார்பில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. விசாரணையின் போது, ஆமதாபாத் மற்றும் குஜராத்தின் பிற பகுதிகளில் உள்ள மருந்துக் கடைகளில் போலி மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மருந்தின் அசல் பெயர் நிகார்டியா ரிடார்ட் 10 (நிஃபெடிபைன் சஸ்டைண்ட் ரிலீஸ் 10 எம்ஜி – Nifedipine Sustained Release 10 MG).

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நிஃபெடிபைன் (Nifedipine) என்பது கால்சியம்-சேனல் தடுப்பான் (Calcium-channel blocker) வகையைச் சேர்ந்த மருந்து. இது ரத்த நாளங்களைத் தளரச் செய்வதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

By admin