• Thu. Nov 5th, 2026

24×7 Live News

Apdin News

குடியரசுக் கட்சியின் தோல்விக்கு டிரம்ப் காரணமா? 5 முக்கியக் காரணங்கள்

Byadmin

Nov 5, 2026


அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு பின்னுள்ள முக்கிய காரணங்கள்

    • எழுதியவர், ஜேக் லாஃபம்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றியைப் பெற்று, நாடாளுமன்றத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பொதுவாக, அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் ஆளும் கட்சி பின்னடைவைச் சந்திப்பது வழக்கம். ஆனால், இந்த முறை குடியரசுக் கட்சி சந்தித்துள்ள தோல்வி வழக்கமான பின்னடைவைக் காட்டிலும் அதிகமானது.

டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது ஆட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தி இந்தத் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

வாக்காளர்களின் அதிருப்தி முதல் டிரம்பின் சரிந்து வரும் செல்வாக்கு வரை குடியரசுக் கட்சியின் தோல்விக்குக் காரணமான ஐந்து முக்கியக் காரணங்கள் என்ன?

குடியரசுக் கட்சியின் தோல்விக்குப் பின்னால் இருக்கும் 5 முக்கியக் காரணங்கள்

1. விண்ணைமுட்டும் விலைவாசி

அமெரிக்கா முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாக்காளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. முக்கியத் தொகுதிகளில் இந்தக் கோபத்தை நேரடியாகப் பார்க்க முடிந்தது.



By admin