அரசு பணியாளர் தேர்வாணையம் க்ரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித்தண்டலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி வெளியிட்டது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் அன்றைய தினமே தொடங்கியது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி என்றாலும், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.