• Tue. Jun 16th, 2026

24×7 Live News

Apdin News

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – என்ன நடந்தது?

Byadmin

Jun 16, 2026


கும்மிடிப்பூண்டி அருகே பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்

கும்மிடிப்பூண்டி அருகே பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

குழந்தைக்கு பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று காலை (ஜூன் 15) உயிரிழந்துவிட்டதாக, அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் கூறியுள்ளார்.

‘இந்தச் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம்’ எனத் தகவல் பரவிய நிலையில், ஒருவர் மட்டுமே குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிகாரை சேர்ந்த  19 வயது இளைஞர் ஒருவர், குழந்தைக்கு பிஸ்கெட் கொடுத்துக் கூட்டிச் சென்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பிகாரைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.

By admin