ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த முழு விவரங்கள் அடுத்த வாரம் வெளியாகலாம் என்றும், ஹார்முஸ் நீரிணை இந்த வாரம் திறக்கப்படலாம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜே.டி. வான்ஸ் நம்பிக்கை:
இதுகுறித்து சி.என்.பி.சி.-க்கு அளித்த நேர்காணலில் ஜே.டி. வான்ஸ் பேசும் போது, “ஹார்முஸ் நீரிணை எவ்வித கட்டணமும் இன்றி நீண்ட காலத்திற்கு திறக்கப்படும் என்று நம்புகிறோம்.
சமீபத்திய தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளில் நாங்கள் எதிர்நோக்குகிறோம். இந்த விவகாரத்தில் ஒன்றாக அமர்ந்து விவாதித்து, முன்னோக்கி எடுத்து செல்ல பல்வேறு மிகமுக்கிய விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன,” என்று தெரிவித்தார்.