1
‘ரோஜா’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை மதுபாலா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சின்ன சின்ன ஆசை’ எனும் புதிய திரைப்படம் – எதிர்வரும் 19 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா, சாய் ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஜித் பாபுஜி தயாரித்திருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இதனை வழங்குகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்துக்களின் புனித தலமான காசியில் எதிர்பாதவிதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் இடையே நிகழும் உணர்வு பூர்வமான தருணங்கள்..அவர்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு அவர்கள் தங்களது சின்ன சின்ன ஆசைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அதன் பிறகு என்ன? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் திரைக்கதை ” என்றார்.
‘கருப்பு’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான மலையாள நடிகர் இந்திரன்ஸ் – ‘ரோஜா’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை மதுபாலா – ஏஜிஎஸ் நிறுவனம் – தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் வெளியீடு – என பல அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால்.. ‘சின்ன சின்ன ஆசை’ படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.