பட மூலாதாரம், Getty Images
சீனாவில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக அரசு அறிவித்த முதல் நாடு தழுவிய மானியத்தின் கீழ், மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான்( 500 டாலர்) பெற்றோருக்கு வழங்கப்படுகிறது.
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு, அதன் சர்ச்சைக்குரிய ‘ஒரு குழந்தை கொள்கையை’ கைவிட்ட பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த மானியங்கள் சுமார் 20 மில்லியன் குடும்பங்களுக்கு குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளை ஈடுசெய்ய உதவும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீனா, மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொள்கிறது. இதனால், மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க, பல மாகாணங்கள் முன்னோட்டமாக சில மானியங்களை வழங்கி வருகின்றன.